டெஸ்க்டாப் பாதுகாப்பு
Tஉங்கள் கணிப்பொறியை பாதுகாப்பாக செட்அப் செய்வதற்கு வணிகர் ஆவணத்தை கவனத்துடன் படித்து அதில் சொல்லப்பட்டவைகளை பின்பற்றவும்
உங்கள் டெஸ்க்டாப்பை பாதுகாக்க வேண்டிய அவசியம் என்ன? தனிப்பட்ட உபயோகத்துக்கான கணிப்பொறியை சரியான பாதுகாப்பு நடவடிக்கையுடன் பயன்படுத்தாவிட்டால், பாதுகாப்பற்ற கணிப்பொறிகளில் உள்ள வளங்களைச் சுரண்டும் சட்டவிரோத நடவடிக்கைகள் நடப்பதற்கு இடம்கொடுப்பதாகி விடும். வைரஸ், ட்ரோஜன்கள், கீலாக்கர்ஸ் மற்றும் ஹாக்கர்களால் இந்த தொந்தரவுகள் ஏற்படலாம். இதனால் தரவுகள் திருட்டு, தரவுகள் இழப்பு, தனிப்பட்ட விவரங்கள் திருட்டு, பாஸ்வேர்டுகள் போன்ற நம்பகமான தகவல்களை எடுத்தல் ஆகியவை ஏற்படும். அதனால் உங்களது கணிப்பொறியை ஆபத்து வருவதற்கு முன்பே பாதுகாக்கவும். .