Broad Band Security
ப்ராட்பேண்ட் இன்டர்நெட் பாதுகாப்பு
அதிவேக நெட்வொர்க் இணைப்புதான் அகலக்கற்றை (ப்ராட்பேண்ட் ) என்று அழைக்கப்படுகிறது
சம்பிரதாய இணைய சேவைகள் டயல் ஆன் டிமாண்ட் முறையில் கிடைக்கின்றன. ஆனால் அகலக்கற்றை முறையில் இணையம் எப்போதும் ஆன் ஆக இருக்கும். அதனால் பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உண்டு.
நமக்குத் தெரியாமலேயே பிற கணிப்பொறிகளின் செயல்பாடுகளைத் தொந்தரவு செய்வதற்கான மேடையாக வேறு நபர்கள் நமது கணிப்பொறியைப் பயன்படுத்தும் வாய்ப்பு உண்டு.
ப்ராட்பேண்ட் இணையவசதியே பரவலாகப் பயன்படுத்தப்படுவதால், ஒவ்வொரு குடிமகனும் அதை பாதுகாப்பாக வடிவமைத்து பாதுகாப்பான பயன்பாட்டுக்கு அமைத்துக் கொள்தல் வேண்டும்